Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae



Karunasaagara Sri Sesha
![]()

![]()
![]()
Avathar Seshadri Swamigal
“Brahmmaanda Naayaka, Sri Sesha, - Vishwanathashtakam*”


“என் நினைவெல்லாம் உன்னைப் பற்றியே, சேஷா!
என் நினவெல்லாம்
நீ எனக்கு செய்த அற்புதங்களைப் பற்றியே, சேஷா!
என் நினைவெல்லாம்
நீ எனக்காக உருவாக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றியே, சேஷா!
என் நினைவெல்லாம்,
நீ எனக்காகவே அவதாரம் எடுத்தாயே,
என தோன்றுகிறதே, சேஷா!
உன் மனதை
பக்தனிடம் பறி கொடுத்துவிட்டாயே, சேஷா!
உன் தபஸ் மகிமையை,
பக்தனிடம் வாரி வழங்குகிறயே, சேஷா
உன் மனதை
பக்தர்கள் படும் துயரங்களில்,
பங்கு கொள்ள வைத்தாயே, சேஷா!
உன் மாசில்லா அன்பைப்
புரிந்து கொள்பவர்கள் தானே, உன் பக்தர்கள், சேஷா!
உன் மனது
கரும்பினும் சுவையுடையது, சேஷா!
உன் மனது
கொம்பு தேனை விட பல மடங்கு
சக்தி வாய்ந்தது, சேஷா!
உன் மனது
மாங்கனியை விட
மேலான சுவையுடையது, சேஷா!
உன் மனது கல்கண்டை விட
மிகவும் தித்திப்பானது, சேஷா!
உன் மனதை,
உன்னைப் போன்ற மனமுடைய “சேஷ பக்தர்களே”
அறிவார்கள், சேஷா!
நீ தான் “அன்பேசிவம்”, சேஷா!
நீ எல்லோருடைய துக்கங்களிலும்,
பங்கு கொள்கிறாய், சேஷா!
நாங்கள் இதற்கு
என்ன கைம்மாறு செய்யப் போகிறொம், சேஷா!
“சேஷ பக்த ஸமாஜத்தின்” மூலம்,
உன் அளப்பரிய மகிமையை
பாரினில் பறை சாற்றுவதே,
எங்கள் ஒரே குறிக்கோள், சேஷா!”

“Let your temptations be to tempt me with your love, in order to receive my grace.”
- Avathar and Mahaan Sri Seshadri Swamigal
* (For having used this mp3 on this site, we thank & acknowledge Sacred Chants, Kosmic Music)



